கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு கூகுள் பிக்சல் 6 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. கூகுளின் மற்ற பிக்சல் ஸ்மார்ட்போன்களை போலவே, வரவிருக்கும் பிக்சல் 6 சீரிஸின் வெளியீடு குறித்து மக்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். முன்னர் அறிவித்தபடி, கூகுள் எல்லா சாத்தியக்கூறுகளிலும் “XL” பெயரிடலை பிக்சல் 6 சீரிஸ் “Pro” மாடலுக்கு ஆதரவாக மாற்றும் எனவும் தெரிவித்துள்ளது. ப்ரொசர் வெளியிட்ட தகவல்களின்படி, கூகுள் பிக்சல் 6 ப்ரோ 6.71 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
அதேசமயம் வெண்ணிலா கூகுள் பிக்சல் 6.4 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். மேலும், கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஒரு சிறந்த கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கசிந்த தகவலின்படி, பின்புற கேமரா 50 மெகாபிக்சல் அகல-கோண கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சாரை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல பிக்சல் 6 ப்ரோவின் முன்புற கேமராவில் 12 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், பிக்சல் 6 ப்ரோ 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது. மறுபுறம், வெண்ணிலா கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன், பிக்சல் 6 ப்ரோ போனை போல ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 6.4 அங்குல AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். மேலும் பிக்சல் 6 டூயல் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.
இதில் 50 மெகாபிக்சல் அகல கோண கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும். இதுதவிர கூகிள் பிக்சல் 6-ன் முன்புற கேமரா, 8 மெகாபிக்சல் பிராண்ட் ஷூட்டரை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கசிந்த தகவலின்படி, கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 4,614 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, பிக்சல் 6 ஸ்மார்ட்போன்களுக்கு கூகுள் குறைந்தது ஐந்து வருட மென்பொருள் புதுப்பிப்புகளை வழங்கக்கூடும் என்றும் ப்ரோஸர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன்களிலும் ரெண்டர்கள் முன்பு இரண்டு டோன் வடிவமைப்பு மற்றும் ஸ்ட்ரிப் போன்ற கேமரா தொகுதி இருப்பது தெரியவந்துள்ளது.