அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்த கோயில் கட்டுமான பணிகளை ‘ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. கோயிலை சுற்றியுள்ள இடங்களும் தற்போது வாங்கப்பட்டு, ₹2000 கோடியில் மிகவும் பிரமாண்டமான முறையில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அயோத்தியில் ரூ.2000 கோடியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கருவறையில் வரும் 2023 ஆம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் நிறுவப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும் கோவிலின் கட்டுமான பணிகள் 2024 ஆம் ஆண்டின் முடிந்துவிடும் என்றும், ஒப்பந்தம் செய்துள்ள எல்அண்ட்டி மற்றும் டாடா கன்சல்டன்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.