பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என மின்வாரியத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மாதந்தோறும் மின்வாரிய துறையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும். இந்நிலையில் நாகர்கோவில் போக்குவரத்து துறை எதிரே இருக்கும் மின் மாற்றியை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் நாளை ஜூன் 2-ம் தேதி அன்று மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியத் துறை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள கணேசபுரம், இந்துக் கல்லூரி சாலை, எம்.ஜி.ஆர் நகர், வி.ஐ.பி ஜிம் தெரு, சரலூர் மற்றும் போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.