சென்னை துறைமுகத்தில் Cordelia நிறுவனத்தின் சொகுசு கப்பல் சேவை (சுற்றுலா) இன்று (ஜூன் 4) முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதி வேந்தன் கடந்த மாதம் 17ஆம் தேதி விளக்கம் அளித்தார். அதில் சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் முதன்முறையாக சென்னையில் கார்டிலியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் தி எம்பரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை முதல்வர் இன்று தொடங்கி வைக்கின்றார். சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்ப ரூ.22,915 முதல் ரூ.2,37,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் கப்பல் விருந்து மற்றும் கொண்டாட்டங்கள் மட்டுமின்றி திருமணங்கள் நடத்துவதற்கும் அலுவலக மீட்டிங் நடத்துவதற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் 23ஆம் தேதி வரை இந்த சேவை வழங்கப்பட உள்ளது.