மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.