கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடக்கவிருக்கிறது. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு இணையான அதிகாரம் இக்கூட்டத்தில் நிறைவேறும் தீர்மானங்களுக்கு உண்டு. உங்கள் பஞ்சாயத்திற்குட்பட்ட எல்லையில் மதுக்கடைகளை மூடவேண்டும் என கேட்கலாம், ஆனால் மதுவிலக்கு வேண்டும் என கோர முடியாது. முறையாக பயன்படுத்துவீர்.