சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது. 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு தக்காளியின் விலை பெட்ரோல்- டீசல் விலைக்கு ஈடாக உச்சத்தை தொட்ட நிலையில் அதை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு ஒருநாள் தக்காளி தேவை 5 ஆயிரம் டன், சென்னையில் ஒருநாள் தக்காளி தேவை மட்டும் சுமார் ஆயிரம் டன் ஆகும். ஆனால் தமிழகத்தின் மொத்த தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் தான் கூட்டுறவு கடைகள் மூலம் அரசுக்கு விற்கிறது. நியாயவிலைக் கடைகளை போலவே பண்ணைப் பசுமை கடைகளில் விலை கட்டுப்பாட்டுக்கான அற்புதமான தத்துவமாகும்.
மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வதன் மூலமாக மக்களுடைய சுமையை குறைக்க முடியும். அதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.