Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா?…. இங்கெல்லாம் முகாம் நடைபெறும்….!!!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகின்ற 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகமானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை குறித்த மனுக்களை  அளிக்கலாம்

மேலும் நியாய விலை கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை வாங்க இயலாத முதியோர்களுக்கு அங்கீகாரம் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிலையில் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடாக  விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்து  பொதுமக்கள் முகாமில் புகார் அளிக்கலாம். அந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |