Categories
தேசிய செய்திகள்

மக்களே….! ரேஷன் கார்டு மட்டும் இருந்தால் போதும்…. இந்த சேவை முற்றிலும் இலவசம்…. இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுதாரர்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்படுகிறது. இந்த கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் நாடு முழுவதும் இலவசமாக எங்கு வேண்டுமானாலும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அந்தோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தான் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும். இதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு வாங்கி வைத்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசு திட்டங்களின் கீழ் இலவச ரேஷன் பெரும் நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை பெற தகுதியானவர்கள் தான்.

அந்தோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆயுஷ்மான் கார்டு பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் இந்த திட்டத்தோடு இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும. அந்தோதயா திட்டத்தின் கீழ் பயன்பெறாதவர்களால் ஆயுஷ்மான் கார்டு பெற முடியாது.

Categories

Tech |