வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சனையை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துபவர்காகவே கடந்த ஆண்டு புதிய வெப்சைட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வெப்சைட்டில் நிறைய அம்சங்கள் இருந்தாலும் பல பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்தது. வரி செலுத்துவதில் தொழில்நுட்ப ரீதியாக நிறைய பிரச்சினைகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் பலரும் சிரமம் அடைந்தனர். இந்த வெப்சைட்டை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்து தரும் படி உத்தரவிட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டது. இருப்பினும் சில கோளாறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதிலும் வரி செலுத்துவோர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலில் வாடிக்கையாளர்கள் நிறைய சிரமங்களை சந்தித்து வருவதாக புகார்கள் வந்தது. இதனால் வருமானவரித்துறை ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி போர்டில் உள்ள பிரச்சினைகளை சரி செய்வதோடு வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்து வழங்கியுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் மே 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வெப்சைட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து தரும்படி இன்போசிஸ் நிறுவனத்திற்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.