நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனால் தேர்தல் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் கோவாவில் வருகின்ற 14ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டார். அதில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்த மாட்டோம் என்றும், எல்பிஜி சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இனிமேல் 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories