தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது என்றும் தெரிவித்தார்.
இதனிடையில் வாக்குச்சாவடிகளில் ஏற்படும் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகவே இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.