Categories
தேசிய செய்திகள்

மக்களே வாங்கிட்டீங்களா…? இன்னைக்கு தான் கடைசி தேதி…. மறந்துராதீங்க…!!!

தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான ஐந்தாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஆகஸ்ட்-8 முதல் தொடங்கப்பட்டது. இந்த தங்க வெளியீட்டில், தங்கத்தின் விலை இந்த  முறை கிராமிற்கு ரூ.4,790 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். இந்த தங்க பத்திரம் வெளியிடப்படுவது  இன்றுடன் முடிவடைகிறது.

Categories

Tech |