ஜூன் மாதத்தில் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. ஜூன் மாதத்தில் சூரியன் உதயமாவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். கடந்த ஏப்ரல் மாதம் 4 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், ஜூன் மாதத்தில் புதன் கோள் இந்த அணிவகுப்பில் இணைந்து 5 கோள்கள் வானில் தோன்றும்.
இதனை நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி ஒரே நேர்கோட்டில் தோன்றும் நிகழ்வு 2002ஆம் ஆண்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் இந்த அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இதையடுத்து 2040 இல் தான் இந்த நிகழ்வு நிகழும். சூரிய உதயத்திற்கு சுமார் 45 நிமிடத்திற்கு முன் இந்த நிகழ்வு நடைபெறும். இதனை நாம் காணமுடியும் என்று கூறுகின்றனர்.