ஜியோ நிறுவனம் ‘ஜியோ புக்’ என்ற புதிய வகை லேப்டாப்பை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஜியோ புக் லேப்டாப் விண்டோஸ் 10 மூலம் இயங்கும் எனவும் இது ஒரு ARM செயலி மூலம் இயக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. அதோடு இந்த வகை லேப்டாப்பை குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஜியோ லேப்டாப் மூலமாக மடிக்கணினி தவிர ஜியோ பெட்லட், ஜியோ ஸ்மார்ட் டிவி, போன்றவற்றிற்குள்ளும் நுழையலாம் எனக் கூறப்படுகிறது. ஜியோ நெட்வொர்க் மூலம் ஜியோ 4ஜி, ஜியோஃபைபர், ஜியோபோன் மற்றும் விரைவில் ஜியோ லேப்டாப், டேப்லெட் அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரே ஜியோ புக் வழியாக நுழைந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.