Categories
அரசியல்

மக்களே…. வீடு கட்ட, வண்டி வாங்க இதுவே சூப்பர் சான்ஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தற்போது பண்டிகை காலம் வரை இருப்பதால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்க முடியும். வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது டிசம்பர் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். வீட்டுக் கடன் வட்டி விகிதம் 0.35 சதவீதமும், வாகன கடன் வட்டி விகிதம் 0.50 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் 6.85 சதவீதமாகவும் குறைந்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல் இவற்றுக்கான செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |