தமிழக மக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக தற்போது ரேஷன்கார்டு மாறிவிட்டது. இதன் மூலமாக அரசிடமிருந்து இலவச ரேஷன் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கிறது. தற்போது இந்த செயல்முறை டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரே நாடு ,ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது மத்திய அரசு. அதன்படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 650 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரேஷன் கார்டுகளில் தவறான மொபைல் எண்ணை அல்லது பழைய எண்ணை போட்டால் தங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும். இதனால் ரேஷன் கார்டில் சரியான மொபைலின் இருக்க வேண்டியது அவசியமாகும். மொபைல் எண்ணை அப்டேட் செய்வதற்கு முதலில் https://nfs.delhi.gov.in/citizen/updatemobilenumber.aspx என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதன்பின் தங்கள் முன் ஒரு பக்கம் வரும் அதில் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை புதுப்பிக்கவும். அடுத்ததாக வரும் முதல் வரிசையில் குடும்பத் தலைவரின் ஆதார்எண்/NFS ஐடி’-யை கொடுக்க வேண்டும். இரண்டாவது பத்தியில் ரேஷன் கார்டு எண்ணை கொடுக்க வேண்டும். மூன்றாவது பத்தியில் குடும்பத் தலைவரின் பெயரையும் கொடுக்க வேண்டும். கடைசி பத்தியில் உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு சேவ் செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.