ஓவ்வொரு சாதாரண மனிதனின் வீடு என்பது மிகப்பெரிய கனவாகும். ஒருவர் தன் வாழ்க்கையில் செய்யும் மிகப் பெரிய முதலீடு வீடு கட்டுவதற்காக தான் இருக்கும். அவ்வாறு கட்டும் வீட்டிற்கு பாதுகாப்பு என்பது மிக அவசியம் அல்லவா? புதிய வீடு கட்டினாலும் சரி அல்லது கட்டிய வீடு வாங்கினாலும் அதற்கு காப்பீடு மிக அவசியமாகும்.
வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு ஆபத்து வரும்போது அதற்கான பாதுகாப்பு நிவாரணம் அவசியமாகும். வீட்டுக்கு இரண்டு வகையான காப்பீடுகள் உள்ளன. அதில் ஒன்று வீட்டுக்கான காப்பீடு மற்றொன்று வீட்டிலுள்ள பொருட்களுக்கான காப்பீடு, மற்றும் இரண்டிற்கும் சேர்த்து காப்பீடும் உள்ளது. மேலும் வீட்டுக்கு இன்சூரன்ஸ் ஏஜென்ட் மூலமாகவும் நாம் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இன்சூரன்ஸ் எடுத்து பின்பு வீட்டுக்கான காப்பீட்டு பணத்தை பெறுவதற்கு அதற்கு தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் ஏதேனும் சில இயற்கை சீற்றங்களால் இந்த ஆவணங்கள் காணாமல் போகவும் அழிந்துபோகவும் வாய்ப்புள்ளது.