இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இந்நிலையில் இலங்கை மின் துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறியது, சிலோன் பெட்ரோலிய கழகம் அன்னிய செலவாணி பற்றாக்குறை காரணமாக ஒருவாரத்துக்கு தேவையான பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்கிறது. ஆனால் சிலர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை வாங்கி வைத்துக் கொள்கிறீர்கள்.
எனவே எரிபொருள் வாங்க ஒதுக்கீடு முறையை கொண்டு வருவது அவசியம் ஆகும். அனைத்து வாகன உரிமையாளர்களும், தங்களுக்கு அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு வாரத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த எரிபொருள் உத்தரவாதமாக வழங்கப்படும். எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் வரை இந்த முறை தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.