Categories
மாநில செய்திகள்

மக்களே ஷாக் நியூஸ்…. 5 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்….!!!

வருகின்ற 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் 5 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது, அரசு அலுவலகங்களில் 8 லட்சத்து 75 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில் தொழிலாளர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் 40க்கு மேற்பட்ட தொழிலாளர் சங்கங்களை 4 தொழிற்சங்க ஆணைகளாக மாற்றியிருக்கிறது. மேலும் தபால்துறை, ரயில்வே பாதுகாப்பு தொழில்களை கார்ப்பரேட்களிடம் கொடுக்கவும், சிறிய துறைகளை மூடவும் முடிவு செய்துள்ளது.

எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு  18 மாத பஞ்ச நிலுவதொகையை உடனே வழங்கவும் மற்றும் குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அந்த 2 நாட்கள் போராட்டத்தை  முன்னிட்டு சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் கலந்து கொள்கின்றனர்.

அதன்பின் செய்தியாளர்களை  சந்தித்து பேசிய ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் கூறியுள்ளதாவது, இம்மாதம் வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற உள்ளது. ஆகவே இந்த போராட்டத்தில் குமரி மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்க உள்ளதால், அன்றைய நாளில் ஆட்டோக்கள் முழுவதும் இயங்காது என ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |