Categories
உலக செய்திகள்

மக்களே… ஸ்டார்ட் ஆகிட்டு…. “ஹெச்1 பி விசாவுக்கான” பதிவு…. உடனே கிளம்புங்க… தகவல் வெளியிட்ட அமெரிக்கா…!!

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி பணி புரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1 பி விசாவுக்கு நடப்பாண்டில் விண்ணப்பிக்க மார்ச் மாதம் 18 ஆம் தேதி இறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமையின்றி தங்கி பணிப்புரியும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1 பி என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விசாவிற்கு பதிவு செய்யும் வெளிநாட்டவர்களில் 70% பேர் இந்தியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஹெச்1 பி விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது மார்ச் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இது தொடர்பான விபரங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |