இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்ததால் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து இருப்பதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.