பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வரும் 30ஆம் தேதி கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர்களும் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்க உள்ளதாக தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் சுரபி அலுவாலியா தெரிவித்துள்ளார்.