உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “தேர்தல் வரை மட்டும்தான் ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அதற்கு பின்னர் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்படும். மார்ச் மாதம் தேர்தல் முடிந்து விடும் என்பதால் டில்லி அரசு தேர்தலுக்கு பிறகு ரேஷன் பொருட்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடைகளில் சீராக பொருட்கள் வழங்கப்படும். கடுகு எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படும் அதோடு ஏழை மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு மாதந்தோறும் ஒரு கிலோ நெய் ரேஷன் பொருட்களுடன் வழங்கப்படும். பாஜகவால் வழங்கப்பட்ட ரேஷன் பொருட்களின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு உத்திரப் பிரதேசத்தில் 11 லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ளன அவை எல்லாம் விரைந்து நிரப்பப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பாஜக அரசால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அதிக அளவு காவல்துறை மரணங்கள் ஏற்பட்டுவிட்டன இந்த ஆட்சி மிகவும் மோசமானது. இதை மாற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் உள்ளது என அவர் கூறினார்.
Categories