Categories
மாநில செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்… வேலூர் – திருப்பதிக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வேலூர் டூ திருப்பதிக்கு இலவச வாகன சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின்  உறுப்பினராக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொதுமக்களுக்கு திருப்பதி கோவிலுக்கு செல்ல இலவச பேருந்து சேவையை நேற்று முன்தினம் தொடங்கி வைத்துள்ளார்.  இந்த பேருந்து சேவையை பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலிருந்து எம்.எல்.ஏ நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளேன். மேலும் அடுத்த 19 மாதங்கள், நான் இந்த பதவியில் இருப்பேன். அதுவரையிலும் வாரத்திற்கு 6 நாட்கள் திருமலைக்கு பொதுமக்கள் இலவசமாக தரிசனம் செய்து திரும்ப பேருந்து வசதியை, என்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளேன் என்று கூறினார்.

இதற்காகவே 12 பேர் பயணம் செய்யக்கூடிய வகையிலான புதிதாக வேன் ஒன்று வாங்கி உள்ளேன். இந்த சேவையானது இன்று (மார்ச் 1) முதல் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்குள் வேலூர் திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாகனத்தில் குறைந்த இருக்கைகள் வசதி இருப்பதால், ஒரு குடும்பத்தில் 1 அல்லது 2 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். இதற்கு முன்கூட்டியே வேலூர் தி.மு.க அலுவலகத்தில் தங்களது ஆதார் விவரங்களை கொண்டு பதிவு செய்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த இலவச வாகன சேவையால் சேலம்,தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலூர் வழியாக திருப்பதி சென்று சாமி தரிசனத்தை பெற்று வருகிறார்கள். இதனால் இந்த சிறப்பு சேவையை பாராட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர நந்தகுமாருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றனர்.

Categories

Tech |