நாட்டின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐந்தாவது தலைமுறை (5ஜி) தொலைத்தொடர்பு சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், அதிநவீன “ஐந்தாம் தலைமுறை” இணைய சேவை தொழில்நுட்பத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் என்பதன் அர்த்தத்தை ஏழை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று சந்தேகித்த காலம் உண்டு. முன்னதாக 1 ஜிபி டேட்டா 300 ஆக இருந்தது. ஆனால் தற்போது 10க்கு கிடைக்கிறது. நாட்டில் சராசரியாக அனைவரும் மாதத்திற்கு 14 ஜிபி டேட்டா வரை பயன்படுத்துகின்றனர். முன்பு இருந்த செலவில் கணக்கிட்டால் இதற்கு 4,200 ஆகும். ஆனால் தற்போது, 125-150 மட்டுமே செலவாகிறது. அரசின் கடும் முயற்சியின் பலனாகவே இது சாத்தியமானது என்று தெரிவித்தார்.