Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அறிகுறி இருந்தால்…. ஓய்வு முக்கியம்….. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அறிகுறிகள்  தென்பட்டால் முதலில் தனிமைபடுத்தி கொண்டு பதட்டமில்லாமல் கடின உழைப்பை தவிர்த்து குப்புற படுத்து ஒய்வு எடுக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  2 முதல் 4 மணி நேர இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை ஓய்வை எடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும்  மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.  மேலும் மருத்துவ தேவைகளுக்கு மாநகராட்சி மருத்துவர்களை 044-25619263, 25384520, 46122300 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |