பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி 2021 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று எதிர்காலத்தை கணித்து கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த ஒரு வருடமாக கொரோனாவில் அனைவரும் சிக்கியுள்ளனர். ஆனால் இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையவே இல்லை.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று எதிர்காலத்தை கணிக்கும் சக்தி படைத்த பெண்மணி எனப்படும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்பவர் கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டு உலகில் சில பேரழிவுகள் ஏற்படும். அமெரிக்காவின் 45ஆவது அதிபர் மர்ம நோயால் பாதிக்கப்படுவார். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் வலிமையான டிராகன் உலகை கைப்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார். அது சீனாவாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.