தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் முன்னிட்டு மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ஏனெனில் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர்.
இந்த நிலையில் சென்னையில் 3 நாட்கள் “நம்ம ஊரு திருவிழா” என்ற பெயரில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதி ‘நம்ம ஊரு திருவிழா’ நடைபெறுகிறது. இந்த திருவிழாவுக்காக ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.