நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதால் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என கூறப்படுகிறது.
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக 4 பொதுத்துறை வங்கிகளில் பங்கு விலைகள் மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி பொதுத்துறையில் உள்ள 13 வங்கிகளை 5 வங்கிகளாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.மத்திய பட்ஜெட்டில் பொதுத்துறையை சேர்ந்த இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் வருகின்ற 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாளான 13 ஆம் தேதி சனிக்கிழமை, 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என கூறப்படுகிறது. அதனால் பொதுமக்கள் முன்னரே வங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.