தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும். அதன்படி கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது. இதனால் மழை நேரங்களில் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.