தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி 50% சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி உதவியில் மறு அச்சு திட்டத்தின் கீழ் 20 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 20 நூல்கள் மறு வச்சு செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனை மே 14-ஆம் தேதி வரை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு புத்தகங்களை தள்ளுபடியில் வாங்கிய ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பயனடைவீர்.
Categories