Categories
மாநில செய்திகள்

மக்களே…. 6 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்…. புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் கன மழை பெய்து கொண்டிருக்கிறதுஇந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் பெரும்பான்மையான மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. அதனால் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |