சூரிய மண்டலத்தின் ஐந்தாவது மிகப் பெரிய கோள் வியாழன். இந்த கோள் நம்முடைய பூமியை போன்று 1,300 மடங்கு பெரியது. பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் இருப்பது போன்று வியாழனுக்கு 86 சந்திரன்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வியாழன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது. இந்த கோள் நாளை பூமிக்கு அருகே வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 59 வருடங்களுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வானது நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் பொழுது கீழ் திசையில் வியாழன் எழுகிறது. இவ்வாறு எதிரெதிர் திசையில் இந்த நிகழ்வு நிகழும் பொழுது பூமிக்கு நெருக்கமாக வரும் வியாழன் கோள் வானில் தோன்றும். இதற்கு முன்னதாக 1963 ஆம் வருடம் இது போன்ற நிகழ்வு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பைநாகுலர் மூலமாக பார்க்கலாம். மேலும் இந்த நிகழ்வின் போது வியாழன் கோளின் 4 சந்திரன்களை பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.