தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மக்கள் நீதி மையம் அதிமுக, திமுகவை கட்சியினை அடுத்து மூன்றாவது அணியாக இருக்கிறது. இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய கமலஹாசன்,” 66 வயது ஆகிவிட்ட எனக்கு வாய்ப்பு கொடுங்கள். எம்ஜிஆர் கூட மூன்றாவது அணியாக தான் வந்து வெற்றி பெற்றவர்” என்று கூறியுள்ளார்.