Categories
தேசிய செய்திகள்

மக்களே… 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி… உடனே போய் போட்டுக்கோங்க…!!!

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 8 மாதம் முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு 8 மாத முதல் பத்து மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மக்களின் அலட்சியம்தான் கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம். அனைவரும் வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்று அறிவுறுத்தி உள்ளார்.

Categories

Tech |