Google Chrome Browser பயனாளர்கள் அனைவரும் பழைய குரோமை மாற்றுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Google Chrome பயனாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை cert-in வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய பயனாளர்கள் Google Chrome browser- யை பயனாளர்கள் உடனே புதுப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்கு தளங்களில் கூகுள் குரோம் உலவியில் பல சிக்கல்கள் காணப்பட்டுள்ளன. நீங்கள் பழைய கூகுள் குரோம் பிரவுசரை பயன்படுத்தி வந்தால் உடனே அதனை புதுப்பித்துக் கொள்ளுங்கள். ஹேக்கர்கள் உங்கள் கணினியில் தன்னிச்சையான குறியீட்டை பயன்படுத்தலாம்.
அதனால் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படலாம். இந்தக் குறைபாட்டை சரி செய்ய கூகுள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதுபோன்ற பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் இருக்க புதிய பாதுகாப்பு அம்சங்களை விரைவில் வெளியிடப் போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் பயனாளர்கள் அனைவரும் தங்கள் கூகுள் குரோமை உடனே புதுப்பித்துக் கொள்ளுங்கள்.