Categories
மாநில செய்திகள்

மக்களே…! OLA ஆட்டோ, கார் கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….???

சென்னை முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் மற்றும் ஒரு லட்சம் வாடகை கார்கள் ஓடுகின்றன. மக்கள் தங்களுடைய அன்றாட பணிகளுக்காக இதில் பயணம் செய்கின்றனர். இதற்கிடையில் கடந்த சில வருடங்களாக ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதால் டிரைவர்கள் கூடுதலாக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில், ஓலா ஆட்டோ மற்றும் கார்களில் குறைந்தபட்ச கட்டணம் 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரையில் 2.5 கி.மீ. தூரம் வரை குறைந்தபட்சமாக 355 வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ≈110 முதல் 130 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் வசதி கட்டணமாக 5 கிமீ தொலைவிற்கு *35 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு தங்களை அதிகம் பாதிக்கும் என்கின்றனர் பயணிகள். சென்னையில் மட்டும் ஓலாவுக்காக ஆயிரக்கணக்கான கார்கள், ஆட்டோக்கள் ஓடுகின்றன.

Categories

Tech |