Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. Remdesivir மருந்து விநியோகம் தொடங்கியது….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருது வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து கோவை பீளமேடு அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இந்த மருந்து விநியோகம் இன்று துவங்கியது. RTPCR ரிப்போர்ட், CT ஸ்கேன் ரிப்போர்ட், மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளியின் ஆதார் அட்டை மற்றும் மருந்து வாங்க வரும் நபரின் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வந்து மருந்து வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |