தமிழகத்தில் புயல் மற்றும் மழை பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க ஒன்று இணைவோம் வாருங்கள் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் இவ்வாறான பேரிடர் காலத்தில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்கு நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அவசர மருத்துவ உதவி களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். பேரிடர் காலத்தில் மக்களை காக்க ஒன்றிணைவோம் வாரீர், தொண்டர்களே, புயல் நேரத்தில் நிவாரணமாக அமையட்டும் திமுகவின் உதவும் கரங்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவு பெறும் வரையில் மக்களைப் பாதுகாப்பது நம்முடைய கடமை” என்று அவர் கூறியுள்ளார்.