Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களையும், விவசாயிகளையும் எடப்பாடி அரசு ஏமாற்றியுள்ளது – TTV தினகரன்

தமிழக மக்களையும், விவசாயிகளையும் நீட் தேர்வு போல மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறதோ பழனிசாமி அரசு? என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டத்தொடரில் தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி தொடருமா ? தமிழக மக்களையும் , விவசாயிகளையும் நீட் தேர்வு போல் மீண்டும் ஏமாற்றி உள்ளதா அரசு ? தேர்தல் நெருங்குகிறது என்பதால் இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்களோ ?  என்ற ஐயம் எழுந்துள்ளது. வேளாண் மண்டலம் சட்டம் குறித்து உரிய விளக்கம் தந்து சரியான திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |