Categories
தேசிய செய்திகள்

மக்களை ஏமாற்றுவதற்காக…. எல்லை மீறும் பிரபல நிறுவனங்கள்….. மத்திய அரசு எச்சரிக்கை….!!!

நாடு வளர்ந்த காலகட்டத்திலும் பாலின சமத்துவம், கருப்பு-வெள்ளை ஏற்றத்தாழ்வு நீக்கம், சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு போன்ற சிந்தனைகள் தலைகுனியும் அளவிற்கு விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதன்படி சமீபத்தில் வெளியாகிய பிரபல வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் விளம்பரம் ஒன்றில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த விளம்பரம் பாலியல் வன்முறையை தூண்டும் வகையிலும் இருக்கிறது என்று நடிகர்கள் முதல் அரசியல் அமைப்பினர் வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடனே இந்த விளம்பரத்தை நீக்க வேண்டும் என்று ட்விட்டர், யூடியூப் தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்வி தொடர்பான ஆன்லைன் கல்வி நிறுவன விளம்பரம் ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த விளம்பரம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட ஆன்லைன் கல்வி நிறுவனங்களில் அனைவரும் படிக்க வருமாறு அழைக்கிறது. ஏனென்றால், அந்த கல்வி நிறுவனத்தில் படித்த 9 வயது சிறுவன் அதிபுத்திசாலியாகி கோடிகணக்கில் பணம் சம்பாதிப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  யதார்த்தத்திற்கு கொஞ்சமும் பொருந்தாத இதுபோன்ற விளம்பரங்களுக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த ஆன்லைன் விளம்பர நிறுவனதிற்கு மத்திய அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சாத்தியமில்லாத விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடும் சில ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |