கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் முதலில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன்படி அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,156 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,38,929 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று மட்டும் 31 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,312 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து 7,94,503 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 33,095 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.