Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மக்களை தேடி மருத்துவம் திட்டம்”…. பயனடைந்த 72,562 பேர்…!!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பல்லாயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் கீழ் 72562 பயனாளிகள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இயன்முறை வழி மற்றும் ஆதரவு சிகிச்சை நோய்கள் என கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கின்றனர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

மேலும் கலைஞர் வரும்முன் காப்போம் திட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு நோய்கள் வரும் முன்பாக தடுக்கும் வகையில் சென்ற வருடத்தில் 18 முகாம்கள் நடத்தப்பட்டு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், ஆதரவ சிகிச்சை நோய்கள் என பலவற்றிற்காக சிகிச்சைகள் அளிக்கப்ப்பட்டுள்ளது. இதனால்  10963 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

Categories

Tech |