Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவம்…. 1.28 லட்சம் பேர் பயன்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,28,361பேர் பயன் அடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ள 58,341 பேருக்கு நேரில் சென்று மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன நீரிழிவு நோய் உள்ள 36,775பேருக்கு வீட்டில் சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |