Categories
மாநில செய்திகள்

“மக்களை தேடி மருத்துவம்”…. 3 நாட்களில் 25,617 பேர் பயன்…. மா. சுப்ரமணியன் பேட்டி…!!!

திமுக சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி சார்பில் முத்தமிழ் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்கள பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இதுவரை தமிழகத்தில் 2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 90 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் மக்களை தேடி மருத்துவம் இதுவரை உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் தொடங்கவில்லை. இந்த மருத்துவ திட்டத்தின் மூலம் 72 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 617 பேர் பயன்பெற்றுள்ளனர். கொரோனாவால் 60 சதவீதம் உயிரிழப்பு நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |