Categories
மாநில செய்திகள்

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது”….. முதலமைச்சர் உறுதி….!!!!

மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது என்று  முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக கே.பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார். இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தொகை எதுவும் பெறாமல் விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்துக் கொண்டோம்.

திட்டம் செயல்படாத நிலையில் நிலத்தை திரும்பக் கொடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல்லாண்டு காலமாக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்றிட நீதிமன்றங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

கடந்த காலத்தில் அதிமுக அரசு உரிய ஆவணங்களுடன் வழக்குகள் நடத்தாதன் விளைவாகவே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், மக்களை பாதிக்காத வகையிலும் உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடுத்து இம்மக்களை பாதுகாக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல பரப்பளவை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விஸ்தரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.

Categories

Tech |