மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு மக்களை மதிப்பதில்லை என புதுச்சேரி முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை மதிப்பதே இல்லை. மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தும் முடக்கப்படுகிறது. புதுவையில் நாம் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால்,
அதை தடுக்க மத்திய அரசு இங்கு ஒருவரை அனுப்பியுள்ளது. அந்த நபர் புதுச்சேரியின் நலத்திட்டங்களை முடக்குவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் யார் என்பதை தெளிவாக புதுவை முதல்வர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.