Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள் வேலைவாய்ப்பு

மக்களை…. மிஸ் பண்ணிடாதீங்க…. 61 காலி பணியிடங்கள்…. முழு விவரம் இதோ….!!!!

61 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 61 காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வரும் 14ஆம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. எனவே தகுதியான நபர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://tiruppur.nic.in/notice-category/recruitment/ என்ற சமூக வலைதளம் முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். அத்துடன் 0421 2478500 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |