உத்தரபிரதேசத்தில் ஆறாவது கட்ட சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த தேர்தலுக்கு பிறகு உத்திரபிரதேச அரசாங்கம் மூன்று எஞ்சின் கொண்ட அரசாக இருக்கும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நோக்கம் பொதுமக்களின் பங்கேற்பு என மூன்று எஞ்சின் கொண்ட அரசாக செயல்படும். இந்தமுறை உத்திரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் தீபாவளி மற்றும் ஹோலி தினத்தன்று இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்குவோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
Categories